×

லஞ்சம் வாங்கிய வழக்கில் 2 ஆண்டு கடுங்கால் கீழமை நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்தது உயர்நீதிமன்றம்: மருந்து கட்டுப்பாட்டு துறை அதிகாரி சிறையிலடைப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் ராஜாஜிபுரம் கலைவாணர் தெருவைச் சேர்ந்த அசோக் என்பவர் ராகவேந்திரா டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் என்ற பெயரில் மருந்து விற்பனை மற்றும் ஏஜென்சி நடத்தி வந்துள்ளார். இதை தவிர அவரது நண்பர் சுதர்சன் என்பவர் என்பவர் தனியாக ராம்சன் மெடிக்கல் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் என்ற மருந்து ஏஜென்சியினை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் சுதர்சனம் கடந்த 30.6.2014 அன்று நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார். எனவே அசோக் என்பவர் இரண்டு மருந்து ஏஜென்சிகளின் உரிமத்தின் பெயர் மாற்றம் செய்ய சுதர்சன் குடும்பத்தாரும் ஏற்பாடு செய்துள்ளனர்.

இதனையடுத்து 2 மருந்து ஏஜென்சிகளின் உரிமத்தின் பெயர் மாற்றம் செய்ய வேண்டி திருவள்ளூர் உதவி இயக்குனர், மருந்து கட்டுப்பாடு அலுவலகத்திற்குச் சென்று உரிமையாளர் பெயர் மாற்றம் கோரி விண்ணப்பித்துள்ளனர். அப்போது மருந்து கட்டுப்பாட்டுத்துறை உதவி இயக்குனராக இருந்த விஜயராகவன் என்பவர் 2 மருந்து ஏஜென்சிக்கும் சேர்த்து தனக்கு 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். எனவே அசோக் என்பவர் உதவி இயக்குனருக்கு லஞ்சம் தர விருப்பம் இல்லாததால் காஞ்சிபுரம் லஞ்ச ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு ஆய்வாளர் தமிழரசியிடம் கடந்த 25.9.2014ல் புகார் மனு கொடுத்தார்.

அதன் பேரில் விஜயராகவன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, லஞ்ச ஒழிப்புத்துறையினர் அறிவுறுத்தலின் பேரில் ரசாயனம் தடவிய ரூ.20 ஆயிரத்தை அசோக் என்பவர் கொடுத்த போது அதை பெற்ற உதவி இயக்குனர் விஜயராகவன் பெற்ற போது கையும் களவுமாக பிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். இதனையடுத்து லஞ்சம் குற்றத்திற்காக திருவள்ளூர் தலைமை குற்றவியல் நடுவர் சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு கடந்த 7.3.2016-ல் விஜயராகவனுக்கு 2 வருடம் கடுங்காவல் தண்டனையும் ரூ.10 ஆயிரம் தண்டனையாக விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில் கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் விஜயராகவன்.

இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் கடந்த ஏப்ரல் 21ம் தேதி வழங்கப்பட்ட தீர்ப்பில் கீழமை நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தண்டனை உறுதி செய்யப்படுவதாக உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் படி மருந்து கட்டுப்பாட்டு துறை உதவி இயக்குனர் விஜயராகவனுக்கு திருவள்ளூர் தலைமை குற்றவியல் நடுவர் மற்றும் சிறப்பு நீதிபதி ஆர்.வேலரஸ் பிடிவாரண்ட் பிறப்பித்ததன் விளைவாக டிஎஸ்பி கலைசெல்வம் தலைமையிலான ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையினர் விஜயராகவனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதனை அடுத்து நீதிமன்றம் உத்தரவின் பேரில் விஜயராகவன் சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

The post லஞ்சம் வாங்கிய வழக்கில் 2 ஆண்டு கடுங்கால் கீழமை நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்தது உயர்நீதிமன்றம்: மருந்து கட்டுப்பாட்டு துறை அதிகாரி சிறையிலடைப்பு appeared first on Dinakaran.

Tags : High Court ,Kadungal ,Drug Control Department ,Thiruvallur ,Ashok ,Kalaivanar Street, Rajajipuram, Thiruvallur ,Raghavendra Distributors ,Dinakaran ,
× RELATED குற்ற வழக்கு நிலுவையில் இருந்தால்,...